Sunday, 11 September 2011

முதிர் கன்னி..

கண்ணாடிகள் மறந்து போன  முகமும்  ...
நாட்காட்டி மறந்து போன  வயதுமே
பலருக்கு  முகவரி  தருமிவர்களின்  அடையாளம் ...
குடும்ப பாரமோ , நோய் கண்ட பெற்றோரோ
தங்கைகள் திருமணமோ ,
விரும்பியே சுமந்திடும் குடும்ப பாரம் .
 அழகு சாதன பொருட்களோ ,
மூன்று நாட்களில் தேவதையாக்கும் விளம்பரங்களோ ,
இவர்களை வசீகரிப்பதில்லை. ..
நெற்றியில் ஓட்டும் ஸ்டிக்கர் போட்டும்
தலை சூடிடும் ஒற்றை மலரும்
அழகூட்டிடப் போதுமிவர்களுக்கு  ....
பெண்மை போற்றிடும் நாணம்,
விரும்பியே ஒதுக்கி வைத்து,
குரல்களில் காட்டிடுகிறாள் ஓர் இறுக்கம்
எல்லைகள் தாண்டிடும் விரல்களும் மொழிகளும்
இவள் உலகத்தில் மீப்பெரு தண்டனைக்குள்ளாகும் ..
 சுனங்க வைத்திடும், விடை  தெரியாத   கேள்விக்கணைகளால்,
விழாக்களும், பண்டிகைகளும் ,
விரும்பியே தவிர்க்கப்படுகின்றன ..
கனவுகள்   குறைந்த உறக்கமெனினும்
அவள் கனவிலும் குதிரை மீதர்ந்து வரலாம்
ஓர் ராஜ குமாரன் - மீட்டுச் செல்வதற்காக !!   .

No comments:

Post a Comment