Sunday, 11 September 2011

அதிவிரைவுச்சாலை....

எண்பது,  நூறுகளில் விரையும்
இருசக்கர வாகனங்களின்
பின்னிருக்கைகளில்
தவறாது இருந்திடும்
ஈஸ்ட்ரோஜன், ப்ரோஜெஸ்டீரோன்கள்

முதிர் கன்னி..

கண்ணாடிகள் மறந்து போன  முகமும்  ...
நாட்காட்டி மறந்து போன  வயதுமே
பலருக்கு  முகவரி  தருமிவர்களின்  அடையாளம் ...
குடும்ப பாரமோ , நோய் கண்ட பெற்றோரோ
தங்கைகள் திருமணமோ ,
விரும்பியே சுமந்திடும் குடும்ப பாரம் .
 அழகு சாதன பொருட்களோ ,
மூன்று நாட்களில் தேவதையாக்கும் விளம்பரங்களோ ,
இவர்களை வசீகரிப்பதில்லை. ..
நெற்றியில் ஓட்டும் ஸ்டிக்கர் போட்டும்
தலை சூடிடும் ஒற்றை மலரும்
அழகூட்டிடப் போதுமிவர்களுக்கு  ....
பெண்மை போற்றிடும் நாணம்,
விரும்பியே ஒதுக்கி வைத்து,
குரல்களில் காட்டிடுகிறாள் ஓர் இறுக்கம்
எல்லைகள் தாண்டிடும் விரல்களும் மொழிகளும்
இவள் உலகத்தில் மீப்பெரு தண்டனைக்குள்ளாகும் ..
 சுனங்க வைத்திடும், விடை  தெரியாத   கேள்விக்கணைகளால்,
விழாக்களும், பண்டிகைகளும் ,
விரும்பியே தவிர்க்கப்படுகின்றன ..
கனவுகள்   குறைந்த உறக்கமெனினும்
அவள் கனவிலும் குதிரை மீதர்ந்து வரலாம்
ஓர் ராஜ குமாரன் - மீட்டுச் செல்வதற்காக !!   .

Saturday, 10 September 2011

காத்திருக்கிறேன் நண்பா !!



கல்லூரியின் வாயிலும், வகுப்பறை வெளிகளும் 
காத்திருக்கின்றன   நம் வருகைக்காய் !! 
விடுதி அறைகளின் சுவர்கள்   காத்திருக்கின்றன 
நம சண்டையிட்ட  தருணங்களுடன்
நீண்ட இரவுகளும் , நிசப்தமும் காத்திருக்கின்றன 
நம் அரட்டைகளுக்காய்  !!1
மலைக்கோட்டையில்   மோதிச்சென்றிடும் காற்று
 நம் முகவரி கேட்டுக்   காத்திருக்கிறது !! 
கல்லூரி கலையரங்கின் மூடிய கதவுகள்,  
காத்திருக்கின்றன நம் பாதச் சுவடுகளுக்காய்  !!    
தொலை தூர பயணங்களும் , காய்ச்சல் தருணங்களும்    
காத்திருக்கின்றன உன் அருகாமைக்காய் !!!

மாலை நேர தேநீர்  தருணங்கள்
 காத்திருக்கின்றன நம் பகிர்வுகளுக்காய் !!!
அரசு மருத்துவமனையின் கிணற்றடிமேடையும், குட்டிசுவரும் 
காத்திருக்கின்றன நாம் பேச மறந்த விஷயங்கள
குளிபதன உணவகங்களும் , திரையரங்கின்  இருளும் 
காத்திருக்கின்றன நம் பிறந்தநாள்  கொண்டாட்டங்களுக்காய் !!!! 
தெப்பக்குள கடைகளும் , பொருட்காட்சி சாலைகளும் 
காத்திருக்கின்றன நாம் வாங்க முடியா பொருட்களுடன் !!!
கவிதைகள் என்பதான என் கிறுக்கல்கள் 
காத்திருக்கின்றன உன் வாசிப்பிற்காய் !!!!     

முடிவிலாத இரவுகள்
காத்திருக்கின்றன  நம் தேர்வுகால வாசிப்புகளுக்காய் !!!
உணவு மறந்த மருத்துவமனை  நேரங்களும் ,உயிர் வரை நன்றி சொல்லும் நோயாளிகளும்
காத்திருக்கிறார்கள் நம் சேவைகளுக்காய் 

நானும் காத்திருக்கிறேன் நண்பா !!!
கொஞ்சம்  தேநீர் மற்றும்   
நிறைய  வார்த்தைகளுடன் !!!